கொழும்பு: நேற்று வெளியாகிக்கொண்டிருந்த தேர்தல் முடிவுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்வி உறுதியாகிவிட்டதை தாங்க முடியாமல், மஹிந்த தரப்பினர் இராணுவத்தை வைத்து தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தை இராணுவத்தைக்கொண்டு தாக்கி, பெறுபேறுகளை இடைநிறுத்தி, ஓர் புரட்சியை மேற்கொள்ள திட்டம் வகுத்திருந்தது.
இத்திட்டம் எதிர்தரப்பினருக்கு உடன் தெரியக் கிடைக்கவே, ரணில் விக்ரம சிங்க தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவைத் தொடர்பு கொண்டு இவ்விடயத்தைக் கூறினார். இவ்விடயம் தேர்தல் ஆணையாளர் ஊடாக பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தேர்தல் வெளியீடுகளில் தனது வெற்றிகளை முதலில் வெளியிட வேண்டும் எனவும் மஹிந்த தேர்தல் ஆணையாளருக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். இதன் காரணமாகவே சுமார் ஒரு மணித்தியாலங்கள் தேர்தல் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டு, மஹிந்த வெற்றிபெற்ற தொகுதிகள் வரிசைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தன.
ஆனாலும் பின்னர் தனது தோல்வி உறுதியாகிவிட்டதை தாங்க முடியாமல் இத்திட்டத்தை மஹிந்த நடாத்த இருந்தார்.
ஆனால் உடனடியாக அமெரிக்க மற்றும் இந்தியாவுக்கு இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, மஹிந்தவை மேற்படி இருநாட்டு முக்கியஸ்தர்கள் தொடர்புகொண்டு, இத்திட்டத்தைக் கைவிடுமாறு கேட்டிருந்தனர்.
எனது தோல்வி எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என தனது நிலைமையை குறித்த அதிகாரிகளிடம் மஹிந்த எடுத்துக்கூறவே, ரணில் உடனடியாக அலரி மாளிகைக்கு அதிகாலையில் இரகசியமாக அனுப்பப்பட்டார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற மேற்படி இரகசிய பேச்சுவார்த்தையின்படி மஹிந்த அலரி மாளிகையைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும், தேர்தல் வெளியீடைக் குழப்பும் திட்டம் நிறுத்தப்பட வேண்டும். இராணு நடவடிக்கைகள் கைவிடப்படல் வேண்டும், மஹிந்தவுக்கும் அவரது குடும்பத்துக்குமான பாதுகாப்பை அவரது சொந்த ஊர் செல்லும் வரையில் உறுதியளித்தல் போன்ற பேச்சுக்கள் இடம்பெற்றன.
இதனடிப்படையிலேயே மஹிந்த அலரிமாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தானாகவே அவர் வெளியேறவில்லை என்ற உண்மை தற்பொழுது தெரிய வந்துள்ளது.
அண்மைக்காலமாக மஹிந்தவின் திட்டங்கள் அனைத்தும்தவறி வீழ்த்தப்படுவதும், அவரது திட்டங்கள் அடுத்த நிமிடம் எதிர்க்கட்சிகளுக்கு போய்ச் சேர்வதும் மஹிந்தவின் கடந்தகால ஆட்சிப் பலவீனத்துக்கான அடிப்படைக் காரணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a reply to nizamhm1944 Cancel reply