கொழும்பு: இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04.00 மணியளவில் நிறைவடைந்துள்ளன. இதன்படி காலை 07.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை பதிவான வாக்குகளின் விபரம் வருமாறு,
இதன்படி கண்டி, மாத்தளையில் 75 சதவீத வாக்குப் பதிவுகளும், காலியில் 79 சதவீத வாக்குப் பதிவுகளும், இரத்தினபுரியில் 84 சதவீத வாக்குப் பதிவுகளும், கேகாலையில் 70-75 சதவீத வாக்குப் பதிவுகளும், நுவரெலியாவில் 80 சதவீத வாக்குப்பதிவுகளும், களுத்துறையில் 70 சதவீத வாக்குப் பதிவுகளும், மாத்தறையில் 76 சதவீத வாக்குப் பதிவுகளும், பதுளையில் 61 சதவீத வாக்குகளும், அனுராதபுரத்தில் 76 சதவீத வாக்குகளும், பொலன்னறுவையில் 80 சதவீத வாக்குகளும், திருகோணமலையில் 72 சதவீத வாக்குகளும், குருநாகலில் 77 சதவீத வாக்குகளும், புத்தளத்தில் 71 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பில் 60 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
Published by
![polling+station[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/09/pollingstation1.jpg?w=150&h=101)
Leave a comment