கொழும்பு: இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம் பிழையான செய்தியை வெளியிட்டு பின்னர் அதனைத் திருத்திக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக செய்தி ஒளிபரப்பியிருந்தது. இன்று காலை இந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டதாக சஜித் பிரேமதாச, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்திருந்தார். இந்த செய்தி போலியானது எனவும் தீர்மானமிக்க நேரத்தில் இவ்வாறு போலி செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சஜித் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையாளர் நேரடியாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு சென்று செய்தி ஒளிபரப்புச் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவிற்கு அமைய குறித்த செய்தி திருத்தி சஜித் கட்சித் தாவவில்லை என ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
தங்காலையில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று சஜித், ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளித்தார் என முன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Published by

Leave a comment