காத்தான்குடி, ஏறாவூர், மயிலம்பாவெளி ஆகிய பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு

election (3)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ,ஏறாவூர்,மயிலம்பாவெளி ஆகிய பிரதேசங்களில் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்று முடிந்தது. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் இறுதி நேரத்திலும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை ஆர்வமாக வாக்களித்தனர்.

இதில் ஆண்கள், பெண்கள் இளைஞர் யுவதிகள் வயோதிபர்கள் முதியோர்கள் எவ்வித பாகுபாடுமின்றி மக்கள் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் பொலிசார் பாதுகாப்பு கடடையில் ஈடுபட்டதுடன் தேர்தல் கண்காணிப்பு உத்தியோகத்தர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

election (3)

election

election (2)

Published by

Leave a comment