ஏறாவூர் சமூக ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

unnamed2ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: வறுமைக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த, தமது கற்றல் நடவடிக்கையினை மேலும் தொடர இயலாதுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் ‘பாடசாலை உபகரணங்கள் வழங்கும்’ நிகழ்வொன்றினை ஏறாவூர் சமூக ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்து நடாதத்தியது.

இந்நிகழ்வு ஏறாவூர்  அறபா வித்தியாலயத்தில் 05.12.2015 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணியளவில் அமைப்பின் தலைவர் ஜனாப். மு.முகம்மது அஸ்ரப் அவர்களது தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் அல்ஹாபில் பௌசுல் அவர்களும் இஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். ஹனிபா  அவர்களும், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களும், பிரதேச மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நஸீர் அவர்களும் பிரதான அமைப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். அத்துடன் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் துறை விரிவுரையாளர் அல்ஹாபில் எம்.பி. பௌசுள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், அமைப்பின் தலைவர் தலைமையுரையாற்றும் போது, தமது நிறுவனம் சமூக உணர்வுடன் மக்கள் நலனில் அக்கரை கொண்டு அறிவியல் நோக்கில் ஆராய்ந்து, திட்டமிட்டு சமூக விடயங்களை கையாள்வதாகவும் ஒர இணைப்பாளராக இருந்து தேவையுடையவர்களையும் அதனை தீர்த்து வைப்பவர்களையும் இனம் கண்டு, அத்தேவையினை பூர்த்தியாக்குவதனை பிரதான பணியாகச் செய்வதாகவும் கூரியதுடன், இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார்.

விரிவுரையாளர் அல்ஹாபில்.எம்.பி. பௌசுள் அவர்கள் சிறப்புரையாற்றும் போது, இஸ்லாமிய அடிப்படையில் கல்விக்கான முயற்சியும் அதற்கு உதவி செய்யும் செயற்பாடும் மிக உயர்ந்ததாக பார்க்கப்படுவதுடன், இறைவனிடத்தில் அதற்கான சன்மானமும் கனதியானதென்று விரித்துரைத்தார்.

தொடர்ந்து, பிரதான அமைப்பு அதிதி ஜனாப்.எஸ்.எல்.எம்.கனீபா அவர்கள் உரையாற்றும் போது, கற்றல் செயற்பாட்டினை வறுமை தடுத்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட இந்த முயற்சி காலத்தின் தேவையுணர்ந்து செய்யப்பட்டுள்ளதாகவும் வறுமையுடன் பிறந்து வறுமையுடன் மரணிக்காது, அதனை வெற்றி பெற மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கூறியதுடன், இப்பணிக்குப்பின்னால் உள்ள அத்தனை பேரையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் இறுதி அம்சமாக, வறுமையினால், மேலும் கல்வியை தொடர இயலாத நிலையிலுள்ள மாணவர்கள் 100 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் (பாடசாலை பை, பயிற்சிக் கொப்பி, பேனை, பென்சில், கொம்பாஸ், பாதணி) வழங்கப்பட்டன. ஏறாவூர் முழுவதுமுள்ள (ஏறாவூர் பற்று உள்ளடங்களாக) கிராம அலுவலர் பிரிவு ரீதியாக பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், இன நல்லுறவை ஏற்படத்தும் நோக்கில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இதன் போது பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக, இந்நிகழ்வுடன் தொடர்புடைய அனைவரையும் பாராட்டியதுடன், துணை நின்றோருக்கு ( விசேடமாக கடல் கடந்துள்ளவர்களுக்கு ) அமைப்பின் செயலாளரினால் நன்றி தெரிவித்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment