மைத்திரியை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் NFGGயின் சூறாவளிப் பிரச்சாரம்

unnamedNFGG ஊடகப்பிரிவு

கண்டி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று (04.12.2015) தெல்தொட்டையில் 4 கூட்டங்களும் தஸ்கர மற்றும் கம்பளையில் தலா ஒரு கூட்டமுமாக 6 பொதுக்கூட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்தியது.

இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் மற்றும் அதன் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹலீம் இஷாக் ஆகியோர் தாம் மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் நோக்கம் மற்றும் இக்கூட்டணியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வகிபாகம் என்பவை  பற்றி பொது மக்களுக்கு  தெளிவு படுத்தினர்.  

இதன் போது உரையாற்றிய NFGG இன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் அவர்கள், இம்முறை முஸ்லிம்கள் அனைவரும் நேர காலத்துடன் வாகுச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் படியும் வீடுகளில் இருக்கும் பெண்களையும் வாக்களிக்கத் தூண்டி அவர்களையும் அழைத்துச்செல்லும் படியும் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில்  ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி  NFGGயின் செயற்பாடுகள் கொள்கை விளக்கங்கள் என்பனவற்றை விளக்கும்  ‘ புதிய நாளை ‘ எனும் இலவச பத்திரிகையும் விநியோகிக்கப்பட்டது.

இக்கூட்டங்களில்  புத்திஜீவிகள் உலமாக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment