காத்தான்குடி: எமது நாட்டில் பல்வேறு சமயங்களுடன் மக்கள்வாழ்ந்தாலும் அவர்கள் ஒற்றுமையோடுவாழ்ந்துவருகிறார்கள். இத்தகைய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு அரசாங்கம் பல முன்னெடுப்புக்களை செய்துவருகிறது. இதனை மக்கள் நன்கு உணர்ந்து வெளிப்படுத்தும் தேர்தலையே நாம் எட்டாம் திகதிஎதிர்நோக்க விருக்கிறோம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவர்களும் ஒருமித்தகுரலாக பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிறிசேன அவர்களை ஆதரித்துபகிரங்கமாக பிரச்சாரம் செய்துவருகின்றனர். இதில் பெண்களின் பங்கு அளப்பெரியது. இன்று நாட்டிலுள்ளபொருளாதார நெருக்கடிகள் நீங்கிபெண்கள் சந்தோசத்துடன் வாழமுஸ்லிம் பெண்கள் பொறுப்புடன் மைத்திரிக்கு வாக்களிக்கவேண்டும் எனகாத்தான்குடி நகரசபையின் உறுப்பினர் சல்மா ஹம்ஸா கருத்துரைவழங்கினார்.
காத்தான்குடி நாகூர் பாவாலேனில் உள்ள பெண்கள் மத்தியில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாஅவர்களை ஆதரித்து நடைபெற்றமக்கள் சந்திப்பின்போதுமேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியின் குடும்ப ஆட்சியினால் மக்களின் பொருளாதாரங்கள் சூரையாடப்பட்டுள்ளது. மக்கள் வறுமைக் கோட்டிற்கும்,ஆட்சியாளர்கள் எஜமானர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். தேர்தல் காலம் என்பதால் மக்களுடையபணங்கள் வீணடிக்கப்படுகிறது. எதைக் கொடுத்தாவதுமக்களின் மனநிலையை மாற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஜனாதிபதி நினைக்கிறார்.
அரசியலில் முக்கிய பங்காளிகளாக பெண்கள் இருப்பதால்தான் இவர்களை இலக்கு வைத்துத்தான் நிவாரணங்கள் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைகளை முற்றுபப்புள்ளி வைக்கவேண்டும். முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்களை இலக்கு வைத்து உடைக்கப்பட்டபோது என்ன பரிகாரத்தினை செய்தனர்.
என்பதை எண்ணிப்பாருங்கள். பெண்கள் அணியும் அபாயாமற்றும் ஹிஜாப் என்பவைகள் இழிவு படுத்தப்பட்டபோது ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்காத ஜனாதிபதி இன்று முஸ்லிம்களிடம் வாக்குகேட்டுவருகிறார்.
இப்படியான ஜனாதிபதியை ஆட்சியிலிருந்து வீழ்த்தி அனைவர்களும் ஓரணியில் திரளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இன்றுதேர்தலின் புதியயுக்தியே நடிகர்களை மேடை ஏற்றி வாக்குகளை பெறமுயற்சிப்பதாகும்.
இது எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை பெண்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். நாட்டில் நிலவிவந்த சீரற்ற காலநிலையினால் எத்தனையோ குடும்பங்கள் இடைத்தங்கல் முகாமில் இருக்கும் போது இந்தவேடிக்கைள் தேவைதானா?
எனவே நிலையை உணர்ந்து எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் முஸ்லிம் பெண்கள் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனாஅவர்களின் அன்னச் சின்னத்திற்குவாக்களிக்க வேண்டும் என மேற்கண்டவாறு ஸல்மாஹம்ஸா தெரிவித்தார்.
Published by




Leave a comment