காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து 05-01-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் மாபெரும் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற இம் மாபெரும் ஊர்வலத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளர் எம்ஜெஸீம்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர்,அலி சப்ரி,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,இளைஞர்கள் ,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரத்தை வழங்கி வைத்தார்.
காத்தான்குடி காகில்ஸ் புட் சிட்டிக்கு முன்பாக இருந்து ஆரம்பமான இவ் ஊர்வலம் காத்தான்குடி பிரதான வீதி ஊடாக காத்தான்குடி எல்லைக்கு வந்து மீண்டும் காத்தான்குடி காகில்ஸ் புட் சிட்டியை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment