மஹிந்தவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற இறுதி மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

mubarak election– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காத்தான்குடியில் இறுதி மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 05-01-2015 நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இடம்பெற்ற இம் மாபெரும் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர் ,சியாட்,அலி சப்ரி உட்பட கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

mubarak election

இதன் போது 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்; விஷேட உரை நிகழ்த்தினார்.

election (2)

இக் கூட்டம் சுமார் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெற்றது.

கூட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

election (3)

election

Published by

2 responses to “மஹிந்தவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற இறுதி மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்”

  1. Aaahhhaa Mr.munafiq you just count your last hours.
    once my3 win you will be immediately kicked out from your father’s property (telecom building)
    remember that building belongs to Goverment not your begger ancestor

    1. Asaiiikkkkkkkka Mudiyathu……………………………………………………….. Mahinthata Jayawewaaaaaaaaaaaaaaaaaaa

Leave a reply to mohmedrislan Cancel reply