– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து, ஐக்கிய தேசிய கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன கூட்டாக இணைந்து காத்தான்குடியில் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
காத்தான்குடி-5, ஊர் வீதி, சின்னப்பள்ளி சந்தியில் நடைபெறவுள்ள இம்மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் மேற்படிக் கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
நல்லாட்சிக்கான, ஆட்சி முறை மாற்றத்தை நோக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இம்மாபெரும் இறுதிப் பிரச்சாரப் பொதுக்கூட்டம் http://www.pmgg.org என்ற இணையத்தளத்தில் நேரடியாக இணைய ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment