பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுகூட்டங்களைத் தவிர்த்தார் மைத்திரி

maithiripaala unpகொழும்பு: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பை கருத்திற்கொண்டு நேற்று பல பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லாமல் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியின் ஊடாகவே உரையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி, கலகெதர அமைப்பாளரின் வீட்டில் கூடியிருந்தோர் மத்தியில் இதன்போது உரையாற்றிய அவர் தமது உயிருக்கு ஆபத்து உள்ளமை காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டார்.

பொலநறுவை, அரலகங்விலவில் ஜனவரி 3ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3பேர் காயமடைந்தனர்.இதேவேளை இரத்தினபுரி பெல்மதுல்லையில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்தனர். அத்துடன் நேற்று அதிகாலை இரத்தினபுரி கஹவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment