காத்தான்குடி முஸ்லிம் நண்பர்கள் நிதியத்தினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

3-DSF-– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி முஸ்லிம் நண்பர்கள் நிதியத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 04-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த முஸ்லிம் நண்பர்கள் நிதியத்தின் பிரதிநிதிகளால் 175 குடும்பங்களுக்கு 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு விஷேட சிறப்புரையை அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் அன்சார் நளீமி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி முஸ்லிம் நண்பர்கள் நிதியத்தின் உறுப்பினர்களான பாஹிம் ,ரஸூல் சா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

3-DSF-

4-FD

Published by

Leave a comment