காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் சூடு பிடித்திருக்கின்றன

ELECTION-non-colour[1]காத்தான்குடி: ‘ஜனாதிபதித் தேர்தல் 2015’, பிரதானமாகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனா ஆகியோரை ஆதரித்து இறுதியாக இடம்பெறும் இரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருவதாக எமது நிருபர் தெரிவிக்கிறார்.

மஹிந்தவை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் குர்ஆன் சதுக்கத்திலும், மைத்திரியை ஆதரிக்கும் கூட்டம் சின்னப்பள்ளி சதுக்கத்திலும் இடம்பெற்று வருகின்றன.

கூட்டம் தற்பொழுதுதான் சூடு பிடித்திருப்பதாகவும், மைத்திரி அணிக்கு மக்கள் வெள்ளத்தை அதிகமாகக் காணக்கூடியதாக இருப்பதாகவும் எமது நிருபர் மேலும் தெரிவிக்கிறார்.

மேலதிக விபரங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.

Published by

Leave a comment