ஏறாவூரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்இசேகு இஸ்ஸதீன் பங்கேற்பு

hizbullah segu issadeenஏறாவூர்: ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலி சாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 04-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.

 ஏறாவூர் புன்னக்குடா வீதியிலுள்ள மௌலானா சதுக்கத்தில் இடம்பெற்ற இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் வட -கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,முன்னாள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்

hizbullah segu issadeen

இதன் போது 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் விஷேட உரை நிகழ்த்தினார்.

eravur

இம் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் ,கட்சி ஆதரவாளர்கள், பெரும்திரளான மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment