ஹிஸ்புல்லாஹ் பற்றி ஜே.வி.பி. நியுஸ் இணைய தளமொன்றில் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை – ஊடகவியலாளர் நூர்தீன்

noordeen-1எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி: காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் சகாக்கள் என தலைப்பிட்டு எனது பெயரை பயன் படுத்தி ஜே.வி.பி. நியுஸ் எனும் செய்தி இணைய தளமொன்றில் இன்று (4.1.2015) செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகின்றேன்.

எனது பெயரை பயன் படுத்தி இந்த இணையதளத்தில் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளதானது எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த முனைந்துள்ளதுடன் வேனுமென்று எனது பெயரை இந்த செய்திக்கு போட்டுள்ளனர்.

குறித்த ஜே.வி.பி. நியுஸ் எனும் செய்தி இணைய தளத்தை நான் பார்ப்பதும் கிடையாது அதற்கு செய்திகளை எழுவதும் கிடையாது.

எனது நன்பர் ஒருவர் மூலமே இவ்வாறான செய்தியொன்று எனது பெயரில் வந்துள்ளதாக அறிந்த பின்னரே அதை பார்வையிட்டேன்.

குறித்த ஜே.வி.பி. நியுஸ் எனும் செய்தி இணைய தளம் எனது பெயரை பயன் படுத்தி செய்தி வெளியிட்டதை நான் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான அனாமோதய செய்திகளை வெளியிடும் இணையதளங்களுக்கு நான் செய்தியாளராக செயற்படுவதுமில்லை. செயற்படப் போவதுமில்லை.

இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளை ஊடகத்துறையில் மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல என்பதை நான் இத்தால் தெரிவித்துக் கொள்வதுடன் எனது பெயரை பயன் படுத்தியுள்ள ஜே.வி.பி. நியுஸ் எனும் செய்தி இணைய தளம் இவ்வாறான வங்ரோத்து தனமான ஊடக நடடிக்கையினை செய்யக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

நான் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ நான் ஆதரவாக மேடையேறவுமில்லை கட்சிக்காரியாலங்களுக்கு அலைந்து திரியவுமில்லை என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன்.

குறித்த இணையதளம் நேர்மையான இணைய தளமாக இருந்தால் உண்மைச் செய்திகளை பிரசுரிக்கும் இணையதளமாக இருந்தால் உடனடியா எனது பெயரை இதிலிருந்து எடுத்து விட வேண்டுமென்றும் உங்களது கட்பனையான செய்திகளை மற்றவர்களின் பெயரை பயன் படுத்தி வெளியிடுவது போக்கிலித்தனமான செயல் எனவும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்
எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊடகவியலாளர்,
காத்தான்குடி
4.1.2015

Published by

Leave a comment