பொலன்னறுவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

hizbullah mahinda– பழுலுல்லாஹ் பர்ஹான்

பொலன்னறுவை: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 04-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி பொலன்னறுவை தேசிய விளையாட்டுத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இம் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஷேட உரை நிகழ்த்தினார்.

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவின் சொந்த ஊரான பொலன்னறுவையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் , சிரேஷ்ட அமைச்சர்கள்,அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

hizbullah mahinda

polonnaruva (2)polonnaruva

Published by

Leave a comment