‘ஜனாதிபதித் தேர்தல் 2015’ அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் கடந்த நான்கு வாரங்களாக எமது இணையத்தளம் ஜனாதிபதித் தேர்தல் கருத்து கணிப்பை எமது இணையத்தள வாசகர்கள் ஊடாக நடாத்தி வந்தது. எமது வாசகர்களின் ‘ஒன்லைன்’ வாக்களிப்பின்படி, தொடர்ந்து நான்காவது வாரமாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவே முன்னிலையிலிருக்கின்றார்.
குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் ஏராளமானவர்கள் இலங்கையில் புதிய ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர் என்பதை இவ்வாக்களிப்பின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்.
இவ்வாக்களிப்பு முடிவானது எமது சொந்தக் கருத்தல்ல. எமது வாசகர்கள் இதுவரைக்கும் அளித்துள்ள வாக்குகளின்படியே மைத்திரிபால முன்னிலை வகிக்கின்றார்.
இன்று நள்ளிரவுடன் வாசகர்களுக்கான வாக்களிப்பு நிறுத்தப்படும். இதுவரை வாக்களிக்காத வாசகர்கள் தங்களது ‘ஒன்லைன்’ வாக்குகளை எமது தளத்திற்கு வந்து அளிக்குமாறு கேட்கின்றோம்.
Published by


Leave a comment