காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் காத்தான்குடி கபுறடி வீதியிலும்,புதிய காத்தான்குடி பரீட் நகர் வீதியிலும் நிறுவப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்களை திறந்து வைக்கும் நிகழ்வு 03-01-2014 நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
மேற்படி இரண்டு பிரதேச தேர்தல் காரியாலங்களையும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், நகர சபை உறுப்பினர் சியாட் ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment