– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
கொழும்பு: நல்லாட்சியை நோக்கி ஆட்சி முறை மாற்றத்திற்காக பொது எதிரணியினர் ஒன்றுபட்டுள்ளமை, சமகால அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. இந்த சந்தர்ப்பத்தில், பொது வேட்பாளரை நிபந்தனை எதுவுமின்றி ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) முன்வந்துள்ளதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) முழு மனதுடன் வரவேற்கிறது.
தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இருப்பையும், அபிலாஷைகளையும் பலப்படுத்தும் அரசியல் வியூகத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை கூட்டமைப்பின் இந்த அரசியல் தீர்மானம் மேலும் வலுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2013ல் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலின்போது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றின் அடிப்படையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டது.
மூலோபாய ரீதியாக இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனவரி 8ஆந் திகதிக்குப் பின்னர் ஏற்படவுள்ள புதிய அரசியல் சூழலில் இந்த அரசியல் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதென நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை தெரிவித்துள்ளது.
Published by

Leave a comment