கொழும்பு: பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் (WEDF), யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் அனுசரணையுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவிகள் பங்கு கொண்ட சுற்றுலாவொன்று அன்மையில் அன்மையில் நடைபெற்றது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினரமான சல்மா ஹம்சாவின் தலைமையில் பெண்களின் சமூக பொருளாதாரத்தினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் இடம் பெற்ற இந்த சுற்றுலாவின் போது கொழும்பிலுள்ள பல்வேறு இடங்கள் பர்வையிட்டதுடன் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூதின் ஏற்பாட்டில் இலங்கை பாராளுமன்றத்தையும் பார்வையிடடனர்.
இதன் போது விளையாட்டினூடாக சமாதானத்தை ஏற்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் கொழும்பு சிறிமாவோ பண்டார நாயக்கா பாடாலை வலைப்பந்தாட்ட மைதானத்தில் மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர் பாடசாலை, மற்றும் ஓட்டமாவடி பாத்தமா பாலிகா பாடசாலை, கொழும்பு சிறிமாவோ பண்டார நாயக்கா பாடாலை ஆகிய பாடசாலை மாணவிகள் பங்கு கொண்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியும் நடைபெற்றது.
இதில் முதலாமிடத்தினை கொழும்பு சிறிமாவோ பண்டார நாயக்கா பாடாலை அணியும், இரண்டாமிடத்தினை ஓட்டமாவடி பாத்தமா பாலிகா பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர் பாடசாலை அணியும் பெற்றுக் கொண்டது.
Published by




Leave a comment