பிரதேச சபை உறுப்பினரால் KCDA க்கு நிதி கையளிப்பு

kcda– KCDA

கல்குடா: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஜனாப். கௌரவ. எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர் அகியோருக்கான சினேகபூர்வமான சந்திப்பொன்று 2015.01.01ஆந்திகதி வியாழக்கிழமை பி.ப. 07.30 மணியளவில் KCDA யின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது சில மாதங்களுக்கு முன் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப். கௌரவ. எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர் அவர்களை KCDA உறுப்பினர்கள் சந்தித்து மிக நீண்ட நாள் தேவைப்பாடாகக் காணப்பட்ட உறுப்பினர்களுக்கான ஜேஸ் பெற்றுத்தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கமைவாக அதனை பெற்றுக்கொள்வதற்கான நிதியும் கையளிக்கப்பட்டது.

kcda

இந்நிதியினை ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜனாப். கௌரவ. எஸ்.ஏ. அன்வர் – ஆசிரியர் அவர்கள் KCDA யின் பிரதித்தலைவர் ஜனாப். ஐ.எம். தன்ஸீல், திட்ட முகாமைத்துவ குழுத்தலைவர் ஜனாப். ஏ.எம். சப்ரான், பொருளாளர் எப்.எம். சிப்னாஸ் மற்றும் உறுப்பினர் ஜனாப். எம்.எம். நிப்ராஸ் ஆகியோரிடம் கையளித்தார்.

Published by

Leave a comment