“ஜனாதிபதியை மாற்றுவோம் என முடிவு செய்வது முட்டாள்தனமானது”: ஹிஸ்புல்லாஹ்

hizbullah– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக கணவனையே மாற்ற முயற்சிப்பது சரியா இவ்வாறு கேள்வி எழுப்பினார் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ எம் ஹிஸ்புல்லா நேற்று காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை ஆழ்வதென்றால் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் அதற்காக ஜனாதிபதியையே மாற்றுவோம் என முடிவுசெய்வது முட்டாள்தனமான ஒரு செயற்பாடாகும். நாம் இன்னும் அபிவிருத்தி அடையவேண்டும் எமது சமூகம் இன்னும் அபிவிருத்தியடைய வேண்டும் நாடு மேலும் அபிவிருத்தியடைய வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி நிச்சயம் வெற்றியீட்டுவார். சரத் பொன்சேக்காவை விட மைத்திரிபால இம்முறை படு தோல்வியடைவார். சென்ற முறை இப்பகுதியிலிருந்து நீங்கள் 12000 வாக்குகள் மஹிந்த ராஐபக்ஷவுக்கும் 10000 வாக்குகள் சரத் பொன்சேக்காவுக்கும் இட்டீர்கள் அவ்வாக்குகள் வீணாகிப்போய்விட்டன. நன்றாக சிந்தித்து வாக்களியுங்கள்.

hizbullah

தற்போது இனவாதம் பற்றிப்பேசுகின்றனர். சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலேயே மாவனல்லலையில் 3 பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டன. அதேபோல் ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் பல முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

school kids

மேற்படி நிகழ்வின்போது காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ் எச் அஸ்பர், பாடசாலை அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் திவிநெகும தொகுதி பணிப்பாளர் எம்.எச்.எம்.முஸம்மில், , திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ எல் ஸெட் பஹ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

school student

Published by

Leave a comment