சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மக்கள் சேவைக்கான உறுதி மொழி

sainthamaruthu– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: மலர்ந்துள்ள 2015ம் ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மக்கள் சேவைக்கான புதுவருட உறுதி மொழியினை மேற்கொள்ளும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றது.

இலங்கையை ஆசியாவின் புத்தூக்க பொருளாதாரமாக மேலோங்கச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது குறித்து மனப்பாங்கு ரீதியில் மாற்றங்களை சகல அரசாங்க உத்தியோகத்தர்களிடமும் ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் அரச உத்தியோகத்தர்களின் உறுதி மொழியினை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

sainthamaruthu

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, கணக்காளர் எம்.எம்.உசைனா, திவிநெகும பிரதேச முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

sainthamaruthu (2)

இதன்போது நாட்டில் நிரந்தர சமாதானம், இன நல்லுறவு வலுப்பெற, உத்தியோகத்தர்களின் ஆரோக்கியம் என்பன வேண்டி துஆப் பிரார்த்தனையினை மௌலவி ஏ.அஹமட் நிகழ்;த்தினார்.

Published by

Leave a comment