காத்தான்குடி: காத்தான்குடி Kent Academy of English நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எச். பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி,
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பிரதிப்பணிப்பாளர் எம்.எம். இஸ்மாலெவ்வை, மட்டக்களப்பு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் என் சிதம்பர மூரத்தி, கெண்ட் நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அப்துல் றகுமான் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டு உரையாற்றியதுடன் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.
மேற்படி நிகழ்வில் சமூகத்தினை சித்தரிக்கும் ஆங்கில நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் மாணவர்களினால் நிகழ்வுற்றமை சிறப்பம்சமாகும்.
Published by




Leave a comment