ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலயம் காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் திறந்து வைப்பு

election kattankudy– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் நிறுவப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு 01-01-2015 நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் முஹம்மட் பாயிஸ் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி பிரதேச தேர்தல் காரியாலயத்தை ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கட்சி முக்கியஸ்தர்கள் ,ஊர் பிரமுர்கள், உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

election kattankudy

hizbullah

ladies

Published by

Leave a comment