வாழைச்சேனை: வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் எஸ்.தச்சனாமூர்த்தி அவர்களின் வேண்டுகளுக்கினங்க அல்-கிம்மா நிறுவனம் ஒரு தொகை மின்குமிழ்களையும் ,மின் உபகரணங்களையும் வழங்கி வைத்தது.
இதன் மூலம் வைத்தியசாலையின் மிக நீன்ட நாள் குறைபாடாக காணப்பட்டு வந்த சாலையின் பாதுகாப்பு சுற்று வேலிகள் மற்றும் அதனை அன்டிய பகுதிகள் இருளில் காணப்பட்டன அப்பகுதிகளுக்கு ஒளி ஊட்டப்பட வேன்டிய அவசியத்தை நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.ஹாரூன் (ஸஹ்வி) அவர்களிடம் வைத்தியசாலை நிறுவாகம் சுட்டிகாட்டியது.
இதற்கமைவாக இவ்வேலைத்திட்டம் நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின் அவர்களினால் முன்னொடுக்கப்பட்டது.
இவ்உபகரணங்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் எஸ்.தச்சனாமூர்த்தியிடம் நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின் உள்ளிட்ட தெண்டர்கள் கலந்து கொண்டு கையளிப்பதனை படங்களில் கானலாம்
Published by


Leave a comment