நியுயோர்க்: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேருவதற்கு பாலஸ்தீனத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளது குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்த முடிவால் எந்தப் பயனும் ஏற்படாது என்று கூறியுள்ள அமெரிக்கா இது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத் தலைவர்களின் முன்னெடுப்புக்கு தேவையான அளவுக்கு எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள இஸ்ரேல் அது எந்த வகையான எதிர்நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராகக் கோரி பாலஸ்தீனர்கள் விண்ணப்பித்துள்ளது, காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதியில் இஸ்ரேலால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
அதேநேரம் இந்த முன்னெடுப்பு காரணமாக ஹமாஸ் போன்ற பாலஸ்தீனக் குழுக்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்தவும் நேரிடலாம் என்றும் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
Published by
![palestine_flag[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/palestine_flag1.jpg?w=150&h=95)
Leave a comment