காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இரண்டாம் கட்டமாக 4 பாடசாலைகளில் 2828 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 01-01-2015 இன்று வியாழக்கிழமை 4 பாடசாலைகளில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் உட்பட பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி அன்வர் வித்தியாலயம், நூறானியா வித்தியாலயம், பதுறியா வித்தியாலயம், பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம் உள்ளிட்ட 4 பாடசாலைகளில் கல்வி பயிலும் 2828 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment