கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஹரீஸ் எம்.பி இராஜினாமா

Harees MPssஹாசிப் யாஸீன்

திகாமடுல்ல: கல்முனை பிரதேச அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்  இப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தினை கடந்த திங்கட்கிழமை (29) பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இப்பதவிக்காக அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் ஏனைய வசதிகளையும் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினா் நான்கு வருடங்களாக கடமையாற்றியுள்ளார். இப்பதவிக் காலத்தினுள் கல்முனைத் தொகுதிற்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை (தமிழ், முஸ்லிம்), மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பிரதேசத்திலும் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசத்திலும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இவ் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபா் நீல் டீ அல்விஸ், மாவட்ட திட்டப் பணிப்பாளா் எஸ். அன்வா்தீன், கல்முனை பிரதேச செயலாளர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ. எல். எம். சலீம் அவர்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளதாக அவா் மேலும் தெரவித்தார்.

Published by

Leave a comment