ஆளும் கூட்டணியிலிருந்து கட்சிதாவிய முஸ்லிம் அமைச்சர்கள் தெளிவுபடுத்துவார்களா..?

10805660_10153003079763799_5142067401094241541_n– அபூ ஸைனப்

கொழும்பு: ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 நாள் தேர்தல் விஞ்ஞாபனம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விஞ்ஞாபனத்தில் 100 நாட்கள் செயற்பாடுகளில் 87வது நாளில் மிருக வதைக்கு எதிரான சட்டம் இலங்கையில் அமல்படுத்தப்படும் என்பதாகவும், இதன் பிரகாரம் ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்படும் என்பதாகவும் ஆளும் தரப்பினரால் குறித்த மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆதாரம் காட்டி முஸ்லிம் மக்களை நோக்கி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கை முஸ்லிம்களில் அதிகமானவர்கள் ஆட்சிமாற்றம் தேவை என்பதாலேயே மைத்திரியை ஆதரிக்கின்றனர். மக்களின் முடிவின் பின்னர் தற்பொழுது ஆளும் தரப்பிலிருந்து பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியின் பக்கம் கட்சி தாவியுள்ளனர்.

10805660_10153003079763799_5142067401094241541_n

தற்பொழுது மைத்தரியின் பக்கம் இணைந்துள்ள எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற அல்லது மாகாணசபை உறுப்பினர்களுள் ஒருவராவது இவ்விடயத்தை இலங்கை முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது கட்டாயமானதாக இருக்கின்றது. பதில் தருவீர்களா…?

Published by

Leave a comment