மட்டக்களப்பு உறுகாமம் புதூர் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

உறுகாமம்: ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் புதூர் பிரதேசத்தில் 30-12-2014 நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.       ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட உறுகாமம் புதூர் பள்ளிவாயல் குறுக்கு வீதி, பாடசாலை குறுக்கு வீதி என்பவற்றை திறந்து வைத்ததோடு உறுகாமம் புதூர் முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்களையும் வழங்கி வைத்தார்.

அத்தோடு இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 85 தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் உலர் உணவுப் பொதிகளையும்,   பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 35 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும், வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் கீழ்  13600 ரூபாய் வீதம் 29 பேருக்கு சுய தொழில் செய்வதற்கான வாழ்வாதார உதவிகளையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

உறுகாமம் புதூர் முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலின் தலைவர் எஸ்.எம். மஃரூப் தலைமையில் உறுகாமம் புதூர் அமீர் அலி கிராமிய பல்தேவைக் கட்டிடம், சுபைர் ஹாஜியார் வித்தியாலம் என்பவற்றில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment