மங்களகம மங்களராம மஹா வித்தியாயலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை காரியாலயத்துடன் கூடிய வகுப்பறைக்கட்டிடம் திறந்து வைப்பு

SCHOOL– பழுலுல்லாஹ் பர்ஹான்

செங்கலடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்களகம பிரதேசத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவி தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 30-12-2014 நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.

அங்கு விஜயம் செய்த விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மங்களகம ‘ மங்களராம மஹா விகாரையில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் 49 பேருக்கு சுய தொழில் செய்வதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் 25 இலட்சம் ரூபாய் செலவில் மங்களகம மங்களராம மஹா வித்தியாயலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை காரியாலயத்துடன் கூடிய வகுப்பறைக்கட்டிடத்தையும் திறந்து வைத்ததோடு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 345 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

SCHOOL

மங்களகம மங்களராம மஹா வித்தியாயலத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் ‘ மங்களராம மஹா விகாரையின் விகாராதிபதி தெஹிகம ஞானரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

HIZBULLAH

Published by

Leave a comment