புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
புத்தளம்: ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் பங்காளிகளாக புத்தளம் தொகுதி மக்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு வந்திருந்ததை காணமுடிந்தது.
பொது எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா, புதிய இடது சாரி முன்னணிகளின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரத்ன, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாருக், முத்தலி பாவா பாருக் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், றயீஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லால் பெர்ணான்டோ, எஸ்.எச்.எம். நியாஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி உள்ளிட்ட பெரும்பாலான பிரமுகர்கள் இதன் போது சமூகமளித்திருந்ததுடன் உரையினையும் நிகழ்த்தினர்.
Published by

Leave a comment