தேர்தல் தினத்தன்று பொலனறுவையில் குண்டர்களை களமிறக்கும் மஹிந்த அணி

unnamed2கொழும்பு: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குகளை கொள்ளையடித்து, பொலனறுவையில் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் வழிநடாத்தலுடன், இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் பிரகாரம் நாமல் ராஜபக்சவின் நீலப் படையணி தொண்டர்களைக் கொண்டு தேர்தல் தினத்தில் பொலனறுவையில் கடும் பதற்றம் மற்றும் வன்முறையைத் தோற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் முக்கியஸ்தர்களை தேர்தல் தினத்தன்று வெளியில் இறங்கவிடாமல் முடக்கி வைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் இச்செயற்பாட்டின் இன்னொரு திட்டமாகும்.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குண்டர்கள் தற்போது பொலனறுவை மாவட்டத்திற்குள் பல்வேறு வழிகளில் ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கான தங்குமிட வசதிகள் பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குமாரினால், அவ்வப்பிரதேச விகாரைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறைந்த பட்சம் பொலனறுவை மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பணியாகும். இதற்கு முன்னர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதே போன்றதொரு குண்டர் குழு களமிறக்கப்பட்டு காலி மாவட்டத்தில் சரத் பொன்சேகா தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment