“தேர்தலின் போது முறைகேடு செய்தால் வாக்குப் பதிவு ரத்து”: மகிந்த தேசப்ரிய

maithiri electionகொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது வாக்கெடுப்பு நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால் அங்கு வாக்குப்பதிவு ரத்துச் செய்யப்பட்டு மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமென்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்தார்.செவ்வாய்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வாக்கெடுப்பு நடைபெறும் போது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மக்கள்மீது அழுத்தங்கள் விடுப்பது மற்றும் வாக்களிக்கச் செல்லும் மக்களைத் தடுப்பது ஆகியவை சட்ட விரோதமான செயல்கள் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

தேர்தல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டால் அதன் முலம் எந்தப் பயனும் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை அளிக்குமாறு மக்களிடம் அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

maithiri election
அரசாங்கத்தின் அடக்குமுறைகளில் ஒன்று

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் நாளில், பாதுகாப்புக் கடமைகளுக்காக ராணுவத்தினர் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் மகிந்த தேசப்ரிய கூறினார்.

வாக்கெடுப்பு நிலையங்களின் பாதுகாப்பு கடமைகளுக்கு இருபதாயிரத்துக்கம் மேற்பட்ட பொலீசார் ஈடுபடுத்தப் படுவார்களென்று கூறிய அவர் இராணுவத்தினரின் சேவை அவசியமென பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இராணுவத்தினர் அழைக்கப்படுவார்களென்று கூறினர்.

Published by

Leave a comment