காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முதற்கட்டமாக 7 பாடசாலைகளில் 5228 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 31-12-2014 புதன்கிழமை 7 பாடசாலைகளில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்ழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சியாட், அலி சப்ரி உட்பட பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
31 இன்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் மீரா பாலிகா தேசிய பாடசாலை, அல் ஹிறா மகா வித்தியாலயம், ஜாமிஉல்ழாபிரீன் வித்தியாலயம், மில்லத் மகளிர் வித்தியாலயம், ஹிழுறியா வித்தியாலயம், மெத்தைப்பள்ளி வித்தியாலயம், ஸாவியா வித்தியாலயம் உள்ளிட்ட ஏழு பாடசாலைகளில் கல்வி பயிலும் 5228 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment