காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் அலுவலகம் இன்று (30.12.2014) செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
அதிகாலை 03.00 மணியழவில் எமது காரியாலயத்திற்கு வந்த உள்ளுர் அரசியல் வாதியின் அடியாட்களே இந்த நாசகார வேளையில் ஈடுபட்டுள்ளதாக பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சிப்லி பாறூக் மேலும் குறிப்பிட்டார்.


Leave a comment