தம்புள்ளை: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் மேலும் 5 ஆளும் கட்சியின் பிரதேச தலைவர்கள் இணைந்து கொண்டனர். தம்புள்ளை மாநகர சபையின் பிரதி மேயர் குசும்சிறி ஆரியதிலக்க மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம். ரூபசிங்க ஆகியோர் நேற்று மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்து கொண்டனர்.
மேலும், வில்கமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் பொது வேட்பாளருடன் இணைந்து கொண்டனர்.
Published by

Leave a comment