காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் கையூம் அர்ஷாட் ஸஜா எனும் மாணவன் கடந்த 2014, க.பொ.த. (உ/த) பரீட்சையில், கணிதப் பிரிவில் 3 பாடங்களிலும் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்திருப்பதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாவது இடத்தையும் பெற்றிருக்கின்றார்.
மேலும் தேசிய ரீதியில் 42வது இடத்தைப் பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவன் காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் அப்துல் கையும் ஆசிரியரின் புதல்வராவார்.
சாதனை படைத்த மாணவன் அர்ஷாட் ஸஜா அவர்களை ‘YourKattankudy’ நிர்வாகம் மற்றும் உலகெங்கிலுமுள்ள அதன் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.
Published by



Leave a comment