காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா வீதியிலும்,புதிய காத்தான்குடி பைஸால் வீதியிலும் நிறுவப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச தேர்தல் காரியாலங்களை திறந்து வைக்கும் நிகழ்வும் ,தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் 29-12-2014 திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.
மேற்படி இரண்டு பிரதேச தேர்தல் காரியாலங்களையும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,பிரமுகர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment