கல்முனை: கல்முனை கூட்டுறவு முன் பள்ளி பாலர் பாடசாலை அமைப்பினால் நடத்தப்பட்ட 34 பேருக்குரிய பிரியாவிடை வைபவமும் 41 பேருக்கு பரிசளிப்பு சான்றிதழ்கள் வழங்கும் விழா அதனுடைய தலைவர் ஜாபீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற விழாவில் பிரதமர் அதிதியாக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடைய உயர்பீட உறுப்பினரும் அம்பாறை
மாவட்ட பொருளாளரும் தேசிய பணிப்பாளரும் ஆகிய யு.ஊ. எஹியாகான் கலந்துகொண்டார். கலந்துகொண்டு இம்மாணவர்கள் 34 பேருக்கும் பணப்பரிசுகளும் அதோடு 41 மாணவர்களுக்கு படிப்பிற்கான கட்டணத்தையும் திடிரென அள்ளிச்சொறிந்தார்.
அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் அரசியல் வாதிகளை தேடி நீங்கள் எவரும் அவர்களுடைய காலடியில் செல்லக்கூடாது. நீங்கள் உருவாக்கிய அரசியல்வாதிள் உங்களை தேடி வந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். இப்படியான நோக்கத்துடன்தான் நான் அரசியலை செய்துகொண்டு இருக்கின்றேன். அதோடு நான் எனது அரசியல் பயணத்தை கல்விற்காகவே பயணித்துகொண்டு இருக்கின்றேன்.
அதோடு இப்படி இப்படிப்பட்ட சமுகசேவை அமைப்புகள் இன்னும் உருவாகவேண்டும் அதோடு இந்த அமைப்புகள் இன்னும் பெருகவேண்டும். என்று கேட்கிறேன் அதோடு இங்கே அரசியல் அதிகாரத்தோடு இருக்கின்ற அரசியல்வாதிகள் இப்படியாப்பட்ட அமைப்புகளை தேடிச்சென்று பலப்படுத்த வேண்டும் என்று கேட்பதோடு நாங்கள் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் செல்வதினால் எங்களது கட்சி முடிவு தெரியாமல் இமமேடையில் அரசியல் பேச முடியாது என்று தெரிவித்தார். இவ்விழாவில் விஷேட அதிதிகளாக GMMS. பாடசாலையின் பிரதி அதிபர் நஸார், மற்றும் வைத்திய கலாநிதி புகாரி, மற்றும் செயலாளர் ரியால் அவர்களும் கலந்துகொண்டார்.
Published by




Leave a comment