கொழும்பு: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை ஏற்பாட்டில், இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும்- ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களின் பூரண அனுசரனையில் அகில இலங்கை ரீதியிலான அதான் சொல்லும் போட்டியில் வெற்றி பெற்றவ்ர்களுக்கான பரிசளிப்பு விழா
இன்று மாலை 6 மணிக்கு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு.ஹட்ஸன் சமரசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார். மேலும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள்,மத்திய கிழக்கு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள், ராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் என பலரும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்துள்ளனர்.
இன்று நடைபெறும் அதான் போட்டியின் பரிசளிப்பு விழாவில் நாடு தழுவிய ரீதியில் விண்ணப்பித்த 3000 போட்டியாளர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று வெற்றியாளர்களுக்கு உம்றா செல்வதற்கான வாய்ப்பும் , 10 போட்டியாளர்களுக்கு பெறுமதிமிக்க ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
தாமரைத்தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இன்று மாலை நடைபெறும்
அகில இலங்கை அதான் போட்டி பரிசளிப்பு விழாவுக்கான பூரண அனுசரனை
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும்- ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்களால் வழங்கப்படுகிறது.ஊடகப் பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்
ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகர்.
Published by
![SLBC [2][1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/slbc-211.jpg?w=142&h=150)
Leave a comment