காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலுள்ள தற்காலிக முகாமில் இருக்கும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 28-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மீரா பாலிகா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதன் போது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.எம்.ஜெஸீம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ. நாஸர் ஆகியோரினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு வழங்கி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கினங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment