OSA மதிப்பீட்டுக் குழுவின் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட புதிய காத்தான்குடி கரையோரப் பிரதேச மக்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கள்

osa– OSA

புதிய காத்தான்குடி: தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரடியாக விஜயம் செய்த காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் (OSA)  மதிப்பீட்டுக்குழுவின் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில்  பாதிக்கப்பட்ட புதிய காத்தான்குடி கரையோரப் பிரதேச மக்களுக்கான உலருணவுப் பொதிகள் நேற்று (28.12.2014) மு.ப. 11.00 மணியளவில் அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் (OSA)  புதிய காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மௌலவி அல்ஹாஜ். A.G.M.அமீன் (பலாஹி), அமைப்பின் பொருளாளர் அல்ஹாஜ்.M.M.M..தாஹிர் JP, அமைப்பின் உப தலைவர் M.I.A. நஸார் BA JP,  அமைப்பின் உறுப்பினர் மௌலவி M.H.பைறூஸ் (பலாஹி)JP,  மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

osa

osa

Published by

Leave a comment