காதர், அலவி, ஹிஸ்புல்லா, அஸ்வர், சஹீட், மசூர் மெளலானா கருத்து தெரிவிப்பு
கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நடவடிக்கையால் இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தக்க பாடம் புகட்டும்
வகையில் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
முப்பது வருடங்கள் இந்நாட்டுக்குப் பெருந்தலையிடியாக இருந்த பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் தான் புலிகளால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தம் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு சேவைகளும் வரப்பிரசாதங்களும் ஜனாதிபதியால்தான் பெற்றுக் கொடுக்கப்பட்டன. அப்படி இருந்தும் ரிஷாட் பதியுத்தீன் எம்.பியின் நடவடிக்கை இந்நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்திற்குமே அபகீர்த்தியாக அமைந்துவிட்டது.
ஜனாதிபதி அவர்கள் அவரது கட்சிக்காக தேசியப் பட்டியல் எம்.பி. பதவி ஒன்றைக் கூட சில வாரங்களுக்குமுன்னர் பெற்றுக் கொடுத்தார். அதனையும் பெற்றுக்கொண்டே அவர் எதிரணி அபேட்சகருக்கு ஆதரவு நல்க நடவடிக்கை எடுத்தார். இந்நடவடிக்கையை சகல முஸ்லிம்களும் கண்டிக்க வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கே ஆதரவு நல்க வேண்டும். ரிஷாட் எம்.பி.க்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவு நல்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆளுநர் அலவி மெளலானா
முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானதொன்று. எனவே சமூகத்தின் பாதுகாப்பு அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் வாக்குப் பலத்தை பிரயோகிக் வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளால் முஸ்லிம்களுக்கிருந்த அச்சம் துயரங்களை நீக்கி வடக்கு முஸ்லிம்கள் சொந்த இடங்களில் குடியேற வழியேற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. எம்மிடமிருந்து எவர் விலகிச் சென்றாலும் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்க வேண்டும். அவர்கள் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காகவே விலகியும் தாவியும் செல்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குப் பலத்துடன் இம்முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவாவார் என்பது திண்ணம். இவ் வெற்றியில் முஸ்லிம் மக்களின் பங்கு அதிமுக்கிமானது. எனவே முஸ்லிம் மக்களாகிய எமது மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றியீட்டுவதில் முன்னோடியாக விளங்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
முஸ்லிம் விரோத கருத்துடைய குழுக்கள் அன்றுதொட்டு இன்றுவரை நாட்டில் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவை தலைவிரித்து ஆடமுடியாத அளவில் வடக்கு கிழக்கு தீவிரவாதம் முழு நாட்டையும் ஆட்டிப்படைத்தது. அது முடிவடைந்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கியது. இதன் பின்புலம் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர்
அரசாங்கத்தில் இருந்த வரைக்கும் ராஜா அந்தஸ்தினை அனுபவித்து வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் நயவஞ்சகம் புரிந்து விட்டதாக தகவல் தொடர்பாடல் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியு தீன் இழைத்துள்ள துரோகமானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கே அவமானத்தையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியிருப்பதாக சுட்டிக்காடிய அஸ்வர், முஸ்லிம் சமூகம் சார்பில் தான் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீன் மீள்குடியேற்றத்துக் கான அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். மன்னார், வன்னி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இவரிடம் பெருந்தொகையான பணம் கையளிக்கப்பட்டிருந்தது. அப்போது அவரால் முன்வைக்கப்பட்ட உட்கட்டமை ப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் செய்து கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைத்தொழில் வாணிப அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண் டார். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு ராஜாவைப் போன்றே அவர் அரசாங்கத்தில் இருந் தார். வேறெந்த முஸ்லிம் அரசியல்வாதி யும் அனுபவிக்காததை அவர் அனுபவித்து வந்த நிலையில் இவ்வாறான தொரு தீர்மானத்தை மேற்கொள்வாரென நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அமீர் அலிக்காக நான் எனது பாராளு மன்ற ஆசனத்தையே விட்டுக்கொடுத்தேன். ஆனால் அவர் ஒரு நாள் மாத்திரமே பாராளுமன்றம் வந்து சென்றார். இவ ரது நடவடிக்கையும் ஒரு முஸ்லிம்மான எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ரிஷட் பதியுதீன் மற்றும் அமீர் அலி மேற்கொண்ட துரோகச் செயலினால் முஸ்லிம் சமூகத்திற்கே அவமானம் ஏற்பட்டுள்ளதெனவும் ஏ.எச்.எம். அஸ் வர் தெரிவித்தார். மேலும் தான் அமீர் அலிக்காக தனது ஆசனத்தை தியாகம் செய்யவில்லை. ஜனாதிபதி தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய வேண்டுமென்ப தற்காகவே தனது ஆசனத்தை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினார். இதேவேளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எதிரணியினர் இனவாதிகள், முஸ்லிம் விரோதிகளென வும் அவர் தெரிவித்தார். இவர்களுடன் கூட்டு சேர ரிஷாட் மற்றும் அமீர் அலி எடுத்த முடிவு முட்டாள்தனமானதெனவும் அவர் விளக்கினார்.
அ. இ. ம. கா. தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையான முடிவாகுமென எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங் கத்துடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போது எமது கட்சி முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன் அதனை நிறை வேற்றித் தருவதாகவும் வாக்குறுதிய ளித்தது. அதில் பிரதானமாக ஜாதிக்க ஹெல உருமய கட்சியினால் தடுத்து நிறுத் தப்பட்ட முஸ்லிம்களுக்காக கட்டப்பட்ட 5000 வீடுகளையும் மீள முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த கட்டத்தில் அ. இ. ம. கா. தலைவர் மைத்திரிபாலவை ஆதரிக்க தீர்மானித் துள்ளமை மிகுந்த கவலையளிக்கிறது.
இந்த முடிவை நான் மறுப்பதுடன் நான் உட்பட கொழும்பு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ். எச். அஸ்வர் உட்பட காத்தான்குடி நகர சபை மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றோம். ரிசாட் பதியுதீன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது. எமது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அ. இ. ம. கா. சிரேஷ்ட உபதலைவர் சட்டத்தரணி என். எம். சஹீட்
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகக் கூறிச் சென்று பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்ததன் மூலம் முன்னாள் ரிஷாட் பதியுதீன் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றியிருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உபதலைவர் சட்டத்தரணி என். எம். சஹீட் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவேண்டிய எந்தவொரு தேவையும் இல்லையெனக் குறிப்பிட்ட அவர் மைத்திரிபால சிறிசேன முஸலிம் சமூகத்துக்காக எதனையும் செய்யவில்லை என்றும் கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசை நான் உருவாக்கினேன். அதன் சார்பில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியி ட்ட ரிஷாட் பதியுதீன் வெற்றிபெற்றதும் கட்சியின் தலைமப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருந்தேன். இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று முன்தினம் வெள்ளவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் உறுப் பினர்களுக்குக் கருத்துக்களைக் கூற அனு மதி வழங்கப்பட்டது. எந்தவொரு முடி வும் எட்டப்படாத நிலையில் மதிய போசன இடைவேளையைத் தொடர்ந்து பொது எதிரணியினரைச் சந்தித்து எமது கோரிக்கைகள் குறித்துக் கலந்து ரையாடுவோம் என அமைச்சர் கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்த அனைவரும் உடன்பட்டதால் ரணில் சந்திரிக்கா உள்ளிட்டவர்களைச் சந்திக்கச் சென்றோம். அங்கு சென்றதும் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. ஏன் எனில் ஏற்கனவே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரிஷாட் பதியுதீன். மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு கட்சியில் உள் ளவர்களை ஏமாற்றியுள்ளார். கட்சியின் த¨மைப் பொறுப்பில் இருக்கிறார் என்பதற்காக அவர் நினைப்பது போல் செயற்பட அனுமதிக்க முடியாத. மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை யிலுள்ள முஸ்லிம் மக்களுக்கோ அல் லது நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள முஸ்லிம் மக்களுக்கோ எந்தவித உத விகளையும் செய்யவில்லை. பொதுபல சேன பிரச்சினை ஏற்பட்டபோது மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை. இவ்வாறானதொரு நபருக்கு எவ்வாறு நாம் ஆதரவு வழ ங்குவது. இந்த முடிவால் அதிருப்தியடை ந்த எமது கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் எம்முடன் உள்ளனர். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா எம்முடன் இருக்கிறார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நாம் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுப்போம் என்றார்.
அப்துல் காதர் மசூர் மெளலானா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தூரநோக்கோடு சிந்தித்து செயற்பட்டு நிச்சயம் வெற்றிபெறும் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பெருவெற்றியடையச் செய்ய வேண்டும். அதன் மூலமாக முஸ்லிம் சமூகம் அவருடன் மேலும் நெருக்கமான உறவை வைத்துப் பல காரியங்களைச் சமூகத்திற்காக சாதித்துக் கொள்ளலாம். இதனைவிடுத்து அவரிட மிருந்து பிரிந்து செல்வதால் செல்வோரு க்கே இழப்பு என்பதை பிரிந்து செல் பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று சிங்கள முஸ்லிம் இன நல்லுற வுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் இணைத் தலைவர் அப்துல் காதர் மசூர் மெளலனா தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்தவின் காலத்திலேயே முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். ஆங்காங்கே சில இன வாதிகள் முஸ்லிம் மக்களைச் சீண்டிப் பார்த்து குழப்பங்களை விளைவிக்க முயன்ற பல சந்தர்ப்பங்களில் அவை எதற்குமே ஜனாதிபதி இடமளிக்கவி ல்லை. துரித நடவடிக்கை எடுத்து அவற்றை கட்டுப்படுத்தி முஸ்லிம் மக்களை பயமின்றி வாழ வைத்து வரு கிறார். அவரிடம் அதற்கான அதிகாரமும் பலமும் உள்ளது. இதனை உதறித் தள்ளிவிட்டு எதிரணியினரிடம் போய் சரணடைவது என்பது எமது சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானது எனவும் மசூர் மெளலானா தெரிவித்தார்.
Published by


Leave a reply to Yazeer Adam Cancel reply