முஸ்லீம் காங்கிரஸ் மக்களுடன் மக்களுக்காகவே முடிவுகளை எடுக்கும் – ஹரீஸ் எம்.பி

Harees MPssஹாசிப் யாஸீன்

கொழும்பு: கட்சியின் பல மட்டங்களுடனும் நடாத்தப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் மக்களிளுடைய அபிலாஷைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கான தீர்மானத்திற்கு வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

இதற்கு துணை புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனக்கு உங்கள் கருத்துக்களை தந்து என்றும் என்னுடனிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

இக்கட்சி எப்போதும் மக்களுடன் மக்களுக்காகவே முடிவுகளை எடுக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பேன்.

Published by

Leave a comment