அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி-BA
கல்குடா: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் போக்கு கடும் கவலையழிக்கின்றது. அரசியல் சாணக்கியம் உள்ள தலைமைகள் சமுகத்தை சாணக்கியமாக மாற்ற தவறிவிட்டன தமது சிம்மாசனங்களுக்காக. அதனால் சமூகம் அவ்வப்போது உணர்ச்சி எனும் சளியில் சரிக்கி விழுந்து கொண்டே வந்துள்ளது. சமுகத்தை உணர்ச்சியாலர்களாக வைத்திருப்பதனாலேயே உணர்வு பூர்வமான கருத்துக்கள் செல்லாக்காச்சாக மாறிவிட்டன. இதனால் பொங்கி வடிந்த பின் வெற்றுப் போத்தளாக சமூகம். வலிந்தவற்றை மிச்சம் மீதி இன்றி நக்கி குடித்ததாக தலைமைகள்.
சமூகத்தின் கருத்தாளர்கள் கூட நல்லவர்களாகவே வருகின்றனர் தமெக்கென சுயநலத்தை உள்ளிளுத்துக்கொண்டு ஒரு சிலரைத்தவிர.
சந்தர்ப்பம் வரும்போது வெளிப்பட்டு விடும் அவர்களது சுய உருவங்கள். மக்கள் ஏமாந்து போனதும் இத்தகைய அறிக்கையாலர்களாலும், சமூகப் பிரதிநிதிகள் என்பவர்களாலும் பேச்சுப்போட்டியில் ஒருவன் முதலிடமும் மற்றவன் மேடை ஏறி பேச முடியாமல் விழித்துக்கொண்டு இருப்பானாக இருந்தால் பேச முடியாதவன் தோற்றவன் அல்ல. திட்டமிட்டே அவனது நாக்கும் அருக்கப்பட்டிருக்கலாம் என்பதனை சமூகம் உணரும் பக்குவம் அடையவில்லை.
தமிழ் சமூகத்தின் சந்தடியில்லா போக்கு முதிர்ந்த அரசியலின் வெளிப்பாடே எமது சமூகத்தில் 10 ஆண்டுகளில் 10இலட்சம் ஆபிர்க்கர்களுக்கு நேர்வழியை காட்டியவரை விட பத்தே நாளில் 10இலட்சம் பேரை போர்க்களத்தில் கொன்ற ஜிஹாதிய வீரனையே பிடித்திருக்கும். பொறுமையான விளைவுகளை எதிர்பார்க்காத மனநிலை.
இந்த உணர்ச்சியும், கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத இயலாமையும் முஸ்லிம் சமூகத்தின் முதிச்சிக்கு சவால்களாக உள்ளன.
சில போது சமூகம் எனும் போது அதில் தனது குடும்பமும் அங்கம் என்பதை மறந்து விட்டு, சுவரையே இடித்து விட்டு சித்திரம் வரைய முடியாத குடும்ப சூழ் நிலையம், இழப்புக்கான சமிக்ஞ்சைகளும் விழங்க முடியாத அம்சங்கள் வெளியில் இருக்கும் போது.
எனவே இயல்பான உணர்ச்சிகளும் உணர்வுகளும் இங்கு முடிவுகளாகி விட்டதும், அரசியல் தலைமைகள் உணர்ச்சிகளின் நுரைகளுக்கு சுனாமியை கண்டு பயந்தது போல் பயந்து இருக்கவேண்டிய இடம், காலம், தெரிந்தும் இடம் மாற்றிக் கொள்வதும் எத்தகைய பாதிப்பாக அமையுமென்பதை அடுத்த ஆண்டுகளில் சொல்வேன்.
Published by

Leave a comment