காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள அங்காடி வியாபாரிகள்,நகர சபை தொழிலாளிகள்,கூலித் தொழிலாளிகள்,தனியார் வாகனங்களின் சாரதிகள் ஆகியோருடனான விஷேட சந்திப்பொன்று 28-12-2014 நேற்று சனிக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட சந்திப்பில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள பெரும் திரளான அங்காடி வியாபாரிகள்,நகர சபை தொழிலாளிகள்,கூலித் தொழிலாளிகள்,தனியார் வாகனங்களின் சாரதிகள் உட்பட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்,சியாட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் விஷேட சந்திப்பில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள அங்காடி வியாபாரிகள்,நகர சபை தொழிலாளிகள்,கூலித் தொழிலாளிகள்,தனியார் வாகனங்களின் சாரதிகள் ஆகியோரின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வின் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதுடன் 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும்; விரிவாக ஆராயப்பட்டது.
இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விஷேட உரை நிகழ்த்தினார்.
Published by




Leave a comment