கொழும்பு: அரசியலில் நீண்டகால நண்பனும் இல்லை, துரோகியுமில்லை என்ற பழமொழி இன்னும் பழுதாகவில்லை. குறிப்பாக தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் பெரும்பான்மை அரசியல் தலைமைகள் சிறுபான்மை அரசியல் கட்சிகளை சிறை பிடிப்பது அன்று தொட்டு இன்றுவரை இருந்தாலும், இன்றைய அரசியலில் அவைகள் செல்லாக்காசாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையில மட்டுமல்லாது சர்வதேசதடதிலும் தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆழ்ந்த சிந்தனையொன்றினை காணமுடிகின்றது. நாளுக்கு நாள் வெளிவரும் தகவல்களும், செய்திகளும், ஆளும், எதிரணிகளின் பலத்தினை உரசிப் பார்க்கும் ஒன்றாகவே இருக்கின்றது.
இந்த நிலைமையில் இலங்கை சிறுபான்மை சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகள் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் அரசுக்கு எதிராக பேசப்பட்டுவந்த போதும், ஆளும் அரசு இந்த மக்களின் எதிர்ப்பு தொடர்பில் அலட்டிக் கொள்ளா அசமந்த போக்கினை கொண்டிருந்ததாக எழுந்தமான முறையில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டதொன்றாகும்.
அரசுக்குள் இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது தொடர்பாக காரசாரமான வாக்குவாதங்களை நடத்திய போதும், அதனத முடிவு எட்டாக் கணியாகவே இருந்திருந்தது. இந்தப் பழம் புளிக்கும் என்று தெரிந்தும் இந்த சிறுபான்மை அரசியல் தலைமைகள், மக்களின் பாதுகாப்பு முடியுமான வரை உள்ளிருந்து தக்க வைத்துக் கொள்ள பல சந்தர்ப்பங்களில் அவமானப்பட்டுக் கொண்டு இருந்த செய்திகளும் எமது கண்பார்வைக்கும் இன்னும் மங்காமல் இருக்கின்றது.
இந்த நாட்டு முஸ்லிம்கள் வயது ரீதியாக அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பார்க்கலாம். இந்த கட்சியின் உருவாக்கம், அதன் பின்னரான செயற்பாட்டு வேகம் தொடர்பில் அதிருப்பதி இருந்ததால் இருக்கும் அரசியல் காலத்துக்குள் மக்களுக்கு அதிகமான நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்காக சில அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன. அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று சமூகத்தில் சமூகமாகிவிட்டது.இப்படியான நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட போது றிசாத் பதியுதீன் அவர்கள், மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரை அல்லாஹ்வின் துணையுடன் றிசாத் பதியுதீன் மீது நல்லபிப்பிராயம் கொண்ட மக்கள் அளித்த வாக்குகளால் ஹூனைஸ் பாருக் எம்.பியாக தெரிவானார்.
கடந்த காலங்களாக அவரது செயற்பாடுகள் கட்சியின் தலைமைத்துவத்துக்க ஒப்பில்லாததாக இருந்தததை வெளிவந்த அவரது கருத்துக்களில் தொனித்தென, இது அவரது ஜனநாயக சுதந்திரமாகும். அவர் கட்சியிலிருந்து விலகி ஜக்கிய தேசிய கட்சி அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார். அவர் இப்போது ஐக்கிய தேசிய கட்சி எதை சொல்கின்றதே அதை மட்டும் செய்ய வேண்டும் என்பதில் உடன்பாடு கண்டிருப்பார்.
இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம்கள் நம்பியிருக்கும் இரு பிரதான முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிக்க முன்வந்துள்ளது. இது இந்த நாட்டில் வடக்கிலும், கிழக்கிலும், ஏனைய மாவட்டங்களிலும் வாழும் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரமே இடம் பெற்றதொன்றாகும்.
இன்று முஸ்லிம் கிராமங்கள் தோறும் பெரும் அலை மைத்திரபால சிறிசேனவுக்கு இருக்கின்றது என்ற உண்மையினை ஆளும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்புதம் புரியாத புதிரல்ல. வெற்றிக் கழிப்பில் நான் தான் எள்ற நிலைப்பாட்டுடன் அரசியல் செய்த போதும், தின்நதோறும் செல்லும் ரகசிய தகவல் தொடர்பில் இதனை உண்மைப்படுத்துவதாக கூறிப்படுகின்றது.
இந்த நிலையில் கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் எடுத்த தீர்மானம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இது கட்சிக்கும் கட்சியின் உண்மையான போராளிகளுக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் அவர்கள் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செய்தி ஒன்றில் (2014.112.27 திகதி) வீடியோ காட்சி உண்டு) அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு வருந்தாளி என்றும் எந்த நேரத்டதிலும் அவர் வரலாம் வெளியேறலாம் என்று கூறியதை ஏறறுக் கொண்டாலும், அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் அவர் தெரிவித்துள்ள ஏனைய கருத்துக்களை பார்க்கின்ற போது அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறுகின்ற போது கூறிய நல்லாட்ச்சிக்கான போராட்டம், மக்கள் விடுதலை என்தெல்லாம் கடந்து அவரது சுய நல பிரதி அமைச்சர் பதவிக்காகவே என்பதும் தொனிக்கின்றது.
முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய போது அவருடை வெளிக்கிழம்பி வந்த பாராளுமன்ற, மாகாண சபை, நகர, பிரதேச சபை தலைவர்கள் முதல் உறுப்பினர்கள் வரை ஒட்டு மொத்தம் 65 க்கும் மேற்பட்டவர்கள் என்தை கண்ட ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் வழங்கிய வரவேற்பிலிருந்து தெரிகின்றது. றிசாத் பதியுதீனின் மக்கள் சேவையின் வெளிப்பாடும், மக்களுடன் றிசாத் பதியுதீன் கொண்டிருக்கின்ற நெருக்கத்தையும்.
தனிநபரின் அரசியலை விட சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவரின் வருகையில் தொண்டர்கள் அணி எவ்வாறு இருக்கின்றது என்பதை காணலாம். ஆனால் துரதிஷ்டம் ஹூனைஸ் பாருக், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த போது எந்த வித வரவேற்புமில்லாததை கொண்டு அவரது பின்புலத்தில் வாக்கு வங்கி இல்லையென்பதை புலப்படுத்துகின்றது. ஓடுகின்ற பஸ்ஸில் ஏறி பயணிப்பதன் மூலம் தமது இலக்கை அடைந்து கொள்ளமுடியும், தலைமை தவறு இழைத்தால் அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவத்தின் தவறை அதி உயர் பீட கூட்டத்தில் விமர்சித்துவிட்டு கட்சியிலிருந்து வெளியேறியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யாது கட்சியில் இருந்து வெளியே வந்து தலைமைத்துவத்தை அவமானப்படுத்தும் அறிக்கைகளை முஸ்லிம்களை அழிக்க துடிக்கும் இனத்துவேசிகளின் கூட்டில் நின்று இந்த மக்களை வடு செய்வது என்ன நியாயமாகும்.
அமைச்சர் றிசாதின் தயவில் அரசியலுக்கு வந்து அவரது சிபாரிசினால் சிலஅபிவிருத்தி குழுக்களின் தலைவராக நியமனம் பெற்று இன்று அவருக்க எதிராக அரசியல் ரீதியில் அல்லாது தனிப்பட்ட முறையில் பேசுவது கண்டனத்துக்குரியது.
கட்சியின் செயலாளர் நாயகம் அவர்களே!
கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை மீறுபவரக்ள் எவராக இருந்தாலும் ஏன் இதுவரைக்கும் சட்ட நடவடிக்கையெடுக்கவில்லை. இதனை நீங்கள் எடப்பதன் மூலம் கட்சியின் கட்டுக் கோப்பினை மக்கள் அறிந்து கொள்வதுடன், கட்சியின் செயற்பாடுகளில் மக்கள் அதீத நம்பிக்கை கொள்வார்கள்.
Published by

Leave a comment