-டீன்பைரூஸ்-
காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் நாடளாவியரீதியில் 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்து கல்வி பயில்கின்ற மக்தப் பாடத்திட்டத்தில் EXPRESS CLASS க்கான புதிய மாணவ, மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 7 தொடக்கம் 11 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இருந்து கோரப்படுகின்றன.
அல்குர்ஆனைப் பார்த்து ஓதக்கற்றல்
அல்குர்ஆன் மனனம்
சுன்னத் துஅக்கள் மனனம்
ஹதீஸ் மனனம்
இஸ்லாமிய அகீதா
இஸ்லாமிய சட்டங்கள்
இஸ்லாமியப் பொது அறிவு
இஸ்லாமிய வரலாறு
அறபு மொழிபோன்ற தலைப்புக்களை உள்ளடக்கியதாக இலகுவான முறையிலும் சிறார்களை கவரும் விதத்தில் கவர்ச்சிகரமாகவும் பல துறைசாரந்த அறிஞற் குழுவால் வடிவமைக்கப் பட்டுள்ள இப்பாடத்திட்டத்தில் எமது பத்ரியா மக்தப் பிரிவில் நுற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இணைந்து கல்வியைத் தொடகின்றனஎன்பது சிறப்புக்குரிய விடயமாகும்.
எனவே இம்மக்தப் பாடத்திட்டத்தில் உங்கள் அன்புக்குரிய சிறார்களை இணைப்பதன் மூலம் எதிர்காலங்களில் ஈமானிய சிந்தனை உள்ளவர்களாகவும் அர்ஷின் நிழலை அடையும் வாலிபர்களாகவும் அவர்களை உருவாக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: குறிப்பிட்ட மாணவரகளே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் விண்ணப்பங்களுக்காக முந்திக்கொள்ளவும். விண்ணப்பப் படிவங்களை 5.30 pm இலிருந்து 6.00 pm வரை மக்தப் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வண்ணம்,
அதிபர்,
பத்ரியா மக்தப் பிரிவு,
புதிய காத்தான்குடி.
Published by

Leave a comment